caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 114

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:114

أَفَغَيْرَ ٱللَّهِ أَبْتَغِى حَكَمًا وَهُوَ ٱلَّذِىٓ أَنزَلَ إِلَيْكُمُ ٱلْكِتَٰبَ مُفَصَّلًا وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ ٱلْكِتَٰبَ يَعْلَمُونَ أَنَّهُۥ مُنَزَّلٌ مِّن رَّبِّكَ بِٱلْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா (நான்) தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு வேதத்தை நன்கு விவரிக்கப்பட்டதாக இறக்கினான்.” (என்று நபியே! கூறுவீராக). (இதற்கு முன்னர்) நாம் வேதம் கொடுத்தவர்கள், நிச்சயமாக, இது உம் இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Omar Sharif“தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு மிகத் தெளிவான வேதத்தை இறக்கினான்.’’ (என்று நபியே! கூறுவீராக). இன்னும், (இதற்கு முன்னர்) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள், நிச்சயமாக, இது உண்மையில் (உண்மையான ஆதாரங்களுடன்) உம் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் ஒருபோதும் ஆகிவிடாதீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi114. ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70