caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 109

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:109

وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَٰنِهِمْ لَئِن جَآءَتْهُمْ ءَايَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا ٱلْـَٔايَٰتُ عِندَ ٱللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَآ إِذَا جَآءَتْ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், "நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்” என அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.” என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
Tamil Translation - Omar Sharif(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், “நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்” என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.’’ என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பது (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு தெரியாதா?
Tamil Translation - Abdulhamid Baqawi109. (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி எங்களுக்காக வரும் சமயத்தில், ‘‘நிச்சயமாக நாங்கள் அதை நம்புவோம்'' என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70