وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ وَأَبْصَٰرَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا۟ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِى طُغْيَٰنِهِمْ يَعْمَهُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகிறோம்; அவர்களுடைய அட்டூழியத்தில் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை (விட்டு) விடுகிறோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் (இறுதி வரை) புரட்டிவிடுவோம். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவிடுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi110. முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்.