بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُۥ صَٰحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَىْءٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன். அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்கும்? அவனுக்கு மனைவி இல்லையே! எல்லாவற்றையும் படைத்தான். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன் (-முன்மாதிரி இன்றி அவற்றை படைத்தவன்). அவனுக்கு மனைவி இல்லாமல் இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்க முடியும்? இன்னும், அவனோ எல்லாவற்றையும் படைத்தான். (அவனைத் தவிர எல்லாம் படைக்கப்பட்டவையே!) இன்னும், அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவி கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்.