ذَٰلِكَ بِأَنَّهُمْ شَآقُّوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தார்கள். யார் அல்லாஹ்விற்கு மாறுசெய்வாரோ (அவருக்கு கடுமையான தண்டனை உண்டு. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு மாறு செய்பவர்களை) தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharifஅதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் முரண்பட்டு மாறுசெய்தார்கள். யார் அல்லாஹ்விற்கு முற்றிலும் முரண்பட்டு மாறுசெய்வாரோ (அவருக்கு கடுமையான தண்டனை உண்டு. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு மாறு செய்பவர்களை) தண்டிப்பதில் கடுமையானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கிறானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.