caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 23

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:23

هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் அல்லாஹ், அவனைத் தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் அறவே இல்லை. (அவன்தான்) உண்மையான அரசன், மகா தூயவன், ஈடேற்றம் அளிப்பவன், அபயமளிப்பவன், பாதுகாப்பவன், மிகைத்தவன், அடக்கி ஆள்பவன், பெருமைக்குரியவன் ஆவான். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உண்மையான அரசன், மகா தூயவன், ஈடேற்றம் அளிப்பவன், அபயமளிப்பவன், பாதுகாப்பவன், மிகைத்தவன், அடக்கி ஆள்பவன், பெருமைக்குரியவன் ஆவான். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70