هُوَ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَٰهَ إِلَّا هُوَ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ هُوَ ٱلرَّحْمَٰنُ ٱلرَّحِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் அல்லாஹ். அவனைத்தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் அறவே இல்லை. (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன். அவன்தான் பேரருளாளன், பேரன்பாளன்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன். அவன்தான் பேரருளாளன், பேரன்பாளன் (மகா கருணையும் விசாலமான இரக்கமும் உடையவன்).
Tamil Translation - Abdulhamid Baqawi22. அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்.