caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mujaadila அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 105 · 58:2

ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمْ إِنْ أُمَّهَٰتُهُمْ إِلَّا ٱلَّٰٓـِٔى وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ ٱلْقَوْلِ وَزُورًا وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் எவர்கள் தங்கள் பெண்கள் (-மனைவிகள்) இடம் ளிஹார் செய்கின்றார்களோ அவர்கள் (-அந்த பெண்கள்) அவர்களின் தாய்மார்களாக ஆகமுடியாது. அவர்களின் தாய்மார்கள் அவர்களை எவர்கள் பெற்றெடுத்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. (ளிஹார் செய்வதன் மூலமாக) நிச்சயமாக அவர்கள் பேச்சில் மிகத் தீயதையும் பொய்யானதையும் கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்கிறார்களோ அந்த பெண்கள் அவர்களின் தாய்மார்களாக ஆகமுடியாது. அவர்களின் தாய்மார்களாக இல்லை அவர்களை எவர்கள் பெற்றெடுத்தார்களோ அவர்களைத் தவிர. (ளிஹார் செய்வதன் மூலமாக) நிச்சயமாக அவர்கள் பேச்சில் மிகத் கெட்டதையும் (மார்க்க சட்டத்தில் அறியப்படாததையும்) பொய்யானதையும் கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தான் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70