caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tur அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 76 · 52:36

أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بَل لَّا يُوقِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அப்படி என்றால்) இவர்கள்தான் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்கள் படைக்கப்பட்டவர்கள் தானே! (பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கின்றார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்களோ படைக்கப்பட்டவர்கள், படைப்பவர்கள் அல்ல. பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கிறார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70