أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ بَل لَّا يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதை (-இந்த குர்ஆனை) இவரே புனைந்து கூறுகிறார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, (இவர்கள் பொய் கூறுகின்றனர்.) இவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif“இ(ந்த வேதத்)தை இவரே தானாக இட்டுக்கட்டி கூறுகிறார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, (இவர்கள் பொய் கூறுகிறார்கள்.) இவர்கள் (இந்த வேதத்தை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi33. அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.