نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ وَمَآ أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍ فَذَكِّرْ بِٱلْقُرْءَانِ مَن يَخَافُ وَعِيدِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறுகின்றவற்றை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்களை அடக்கக்கூடியவராக (-கட்டாயப்படுத்துபவராக) இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகின்றவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக!
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறுவதை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்கள் மீது (-அவர்களை அடக்கி வைக்கக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய) கொடுங்கோலனாக இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகிறவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi45. (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!