caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Qaaf அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 34 · 50:44

يَوْمَ تَشَقَّقُ ٱلْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமி அவர்களை விட்டும் பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கின்றது). இது (-மறுமையில் படைப்புகளை ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டல்தான்.
Tamil Translation - Omar Sharifஅவர்களை விட்டும் பூமி பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது). இது (-மறுமையில் படைப்புகளை உயிர்ப்பித்து ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டலாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. (மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டு விலகும் நாளை (நினைவு கூருவீராக). அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70