إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(சிந்திக்கின்ற) உள்ளம் உள்ளவருக்கும் (உள்ளத்தால்) பிரசன்னமாக(வும் சொல்லப்படுவதை கவனிப்பவராகவும்) இருந்து செவிசாய்த்து கேட்பவருக்கும் நிச்சயமாக இதில் நல்லறிவுரை இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifயார் ஒருவர் அவருக்கு (சிந்திக்கின்ற உயிருள்ள) உள்ளம் (-அறிவு) இருக்கிறதோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. அல்லது, யார் ஒருவர் - அவரோ (உள்ளத்தால்) பிரசன்னமாகி இருந்து, (சொல்லப்படுவதை) நன்கு புரிபவராக இருந்து, (அழிக்கப்பட்ட முற்கால மக்களைப் பற்றி நாம் கூறுகிற செய்திகளை) - செவிசாய்த்து கேட்பாரோ (அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது.)
Tamil Translation - Abdulhamid Baqawi37. எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கிறது.