caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Qaaf அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 34 · 50:36

وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًا فَنَقَّبُوا۟ فِى ٱلْبِلَٰدِ هَلْ مِن مَّحِيصٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட மிக பலமான வலிமையுள்ளவர்கள். அவர்கள் நகரங்களில் (மூலை முடுக்குகளுக்கெல்லாம்) சுற்றினார்கள். (இருந்தும்) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா?
Tamil Translation - Omar Sharifஇவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட முரட்டு சக்தி உடைய பலசாலிகளாக இருந்தார்கள். ஆக, அவர்கள் (தங்களுக்கு) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா? என்று நகரங்களில் (மூலை முடுக்குகளில் எல்லாம்) சுற்றி வந்தார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அப்போது அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (இல்லை, கிடைக்காமல் அழிந்து விட்டனர்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70