caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 70

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:70

لَقَدْ أَخَذْنَا مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَأَرْسَلْنَآ إِلَيْهِمْ رُسُلًا كُلَّمَا جَآءَهُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُهُمْ فَرِيقًا كَذَّبُوا۟ وَفَرِيقًا يَقْتُلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினோம், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை ஒரு தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) ஒரு வகுப்பாரை பொய்ப்பித்தனர், ஒரு வகுப்பாரை கொல்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifதிட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை இறைத் தூதர் ஒருவர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் அவர்கள் (நமது தூதர்களில்) சிலரை பொய்ப்பித்தனர், இன்னும், சிலரை கொன்றார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi70. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70