إِنِّىٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثْمِى وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ وَذَٰلِكَ جَزَٰٓؤُا۟ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"என் பாவத்துடனும், உன் பாவத்துடனும் (இறைவன் பக்கம்) நீ திரும்புவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். (அவ்வாறு வந்தால்) நீ நரகவாசிகளில் ஆகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்றும் கூறினார்).
Tamil Translation - Omar Sharif“என்(னை நீ கொலை செய்த) பாவத்தையும், உனது (மற்ற) பாவத்தையும் நீ சுமந்து, நீ நரகவாசிகளில் ஒருவனாக ஆகி விடுவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்று கூறி எச்சரித்தார்.)
Tamil Translation - Abdulhamid Baqawi29. என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்'' (என்று கூறினார்.)