caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 32

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:32

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّوا۟ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَىٰ لَن يَضُرُّوا۟ ٱللَّهَ شَيْـًٔا وَسَيُحْبِطُ أَعْمَٰلَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நிராகரித்தவர்கள், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தவர்கள், நேர்வழி தங்களுக்கு தெளிவானதற்குப் பின்னர் தூதருக்கு மாறுசெய்தவர்கள் அல்லாஹ்விற்கு அறவே எதையும் தீங்கு செய்ய முடியாது. அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கி விடுவான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ; இன்னும், நேர்வழி தங்களுக்கு தெளிவானதற்குப் பின்னர் தூதருக்கு மாறுசெய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விற்கு அறவே தீங்கிழைக்க முடியாது. இன்னும், அல்லாஹ் அவர்களின் (நல்ல) செயல்களை வீணாக்கி (மறுமையில் நற்கூலி அற்றதாக ஆக்கி) விடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi32. நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கிறார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70