وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّىٰ نَعْلَمَ ٱلْمُجَٰهِدِينَ مِنكُمْ وَٱلصَّٰبِرِينَ وَنَبْلُوَا۟ أَخْبَارَكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் ஜிஹாது செய்பவர்களையும் பொறுமையாளர்களையும் நாம் (-நமது நேசர்கள்) அறிகின்றவரை நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். உங்கள் செய்திகளை (-சொல்களையும் செயல்களையும்) நாம் சோதிப்போம் (உண்மையாளர் யார், பொய்யர் யார் என்று வெளிப்படுத்துவதற்காக).
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களிலிருந்து ஜிஹாது செய்பவர்களையும் பொறுமையாளர்களையும் நாம் (அதாவது, எனது நல்லடியார்கள்) அறிகின்ற வரை நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். உங்கள் செய்திகளை (-சொல்களையும் செயல்களையும்) நாம் சோதிப்போம் (உண்மையாளர் யார், பொய்யர் யார் என்று நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக).
Tamil Translation - Abdulhamid Baqawi31. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) சிரமங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவர்கள் என்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரை, உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்.