يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَلَا تُبْطِلُوٓا۟ أَعْمَٰلَكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கு (அவனது ஏவல்கள், விலக்கல்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! தூதருக்கு (அவரது ஏவல்கள், விலக்கல்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! (நிராகரிப்பினாலும் மாறு செய்வதாலும்) உங்கள் அமல்களை வீணாக்காதீர்கள்!
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கு (அவனது மார்க்க சட்டங்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு (அவருடைய கட்டளைகள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! (நிராகரிப்பினாலும் மாறு செய்வதாலும்) உங்கள் அமல்களை வீணாக்காதீர்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi33. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்கள் நன்மைகளை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள்.