caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 25

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:25

إِنَّ ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَٰرِهِم مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلْهُدَى ٱلشَّيْطَٰنُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களில்) நிச்சயமாக தங்களுக்கு நேர்வழி தெளிவானதற்குப் பின்னர் தங்களது பின் புறங்களின் மீதே திரும்பிச் சென்றவர்கள் - ஷைத்தான் அவர்களுக்கு (கெட்ட செயலை செய்யத் தூண்டி அதை) அலங்கரித்தான். (அல்லாஹ்) அவர்களை (சிறிது காலம்) விட்டு வைத்துள்ளான்.
Tamil Translation - Omar Sharif(முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களில்) நிச்சயமாக எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவானதற்குப் பின்னர் தங்களது பின் புறங்களின் மீதே திரும்பிச் சென்றார்களோ அவர்களுக்கு ஷைத்தான் (கெட்ட செயலை செய்யத் தூண்டி அதை) அலங்கரித்தான். இன்னும், அல்லாஹ் அவர்களுக்கு (சிறிது காலம் வரை இந்த உலகத்தில்) அவகாசம் கொடுத்துள்ளான்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்று விட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கி விட்டான். மேலும், அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70