caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 20

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:20

وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَوْلَا نُزِّلَتْ سُورَةٌ فَإِذَآ أُنزِلَتْ سُورَةٌ مُّحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا ٱلْقِتَالُ رَأَيْتَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ ٱلْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ ٱلْمَوْتِ فَأَوْلَىٰ لَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இந்த எதிரிகளிடம் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை அடங்கிய) ஓர் அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா என்று நம்பிக்கையாளர்கள் கூறுகின்றார்கள். (சட்டங்கள்) உறுதி செய்யப்பட்ட ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் (எதிரிகளிடம்) போர் (செய்யுங்கள் என்ற கட்டளை) கூறப்பட்டால் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் மரண பயத்தால் மயக்கமுற்றவர்கள் பார்ப்பது போல் அவர்கள் உம் பக்கம் பார்ப்பார்கள். அவர்களுக்கு கேடுதான்.
Tamil Translation - Omar Sharif(இந்த எதிரிகளிடம் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை அடங்கிய) ஓர் அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா என்று நம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ஆக, (சட்டங்கள்) உறுதி செய்யப்பட்ட ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு, அதில் (எதிரிகளிடம்) போர் (செய்யுங்கள் என்ற கட்டளை) பற்றி கூறப்பட்டால் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ள (நய)வ(ஞ்சக)ர்கள் மயக்கமுற்றவர்கள் பார்ப்பதுபோல் மரண பயத்தால் உம் பக்கம் பார்ப்பார்கள். ஆக, அவர்களுக்குக் கேடுதான்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) ஒரு (தனி) அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உம்மை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70