طَاعَةٌ وَقَوْلٌ مَّعْرُوفٌ فَإِذَا عَزَمَ ٱلْأَمْرُ فَلَوْ صَدَقُوا۟ ٱللَّهَ لَكَانَ خَيْرًا لَّهُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(போர் செய்வது அவசியமாகி விட்டால் இறைத் தூதருக்கு) கீழ்ப்படிவதும், (உங்களுடன் போருக்கு புறப்படுவோம் என்று) நேர்மையாக பேசுவதும்தான் (உங்கள் செயலாக இருந்தது). ஆனால், (போருக்கு புறப்பட வேண்டும் என்று) கட்டளை உறுதியாகிவிட்டால்... (அதை வெறுத்து போரை சிரமமாக பார்க்கிறீர்கள். அப்படி செய்யாமல்,) அவர்கள் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்திருந்தால் (அதுதான்) அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharif(போர் செய்வது அவசியமாகி விட்டால் இறைத் தூதருக்கு) கீழ்ப்படிவதும், (உங்களுடன் போருக்கு புறப்படுவோம் என்று) நேர்மையாக பேசுவதும்தான் (உங்கள் வெளிப்படையான செயலாக இருந்தது). ஆக, (போருக்கு புறப்பட வேண்டும் என்று) கட்டளை உறுதியாகிவிட்டபோது (அதை வெறுத்து போரை சிரமமாக பார்க்கிறீர்கள். அப்படி செய்யாமல்,) அவர்கள் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்திருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருந்திருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. (நபியே! உமக்கு) கீழ்ப்படிந்து நடப்பதும், (உம்மிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் அவர்களுக்கு நன்று. ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும்.