فَٱعْلَمْ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ وَٱللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَىٰكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே (வேறு யாரும்) இல்லை என்பதை நன்கறிந்து கொள்வீராக! உமது தவறுகளுக்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் பாவமன்னிப்பு கோருவீராக! நீங்கள் (பகலில்) சுற்றித்திரியும் இடங்களையும் (இரவில் தூங்குவதற்காக) நீங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக! இன்னும், உமது தவறுகளுக்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் பாவமன்னிப்பு கோருவீராக! நீங்கள் (பகலில்) சுற்றுகிற இடங்களையும் (இரவில் தூங்குவதற்காக நீங்கள் ஒதுங்குகிற) உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (உங்கள் காலை, மாலை, இரவு என எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்தவை அல்ல.)
Tamil Translation - Abdulhamid Baqawi19. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.