إِنَّ ٱللَّهَ يُدْخِلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَٱلَّذِينَ كَفَرُوا۟ يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ ٱلْأَنْعَٰمُ وَٱلنَّارُ مَثْوًى لَّهُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். நிராகரித்தவர்கள் (இவ்வுலகில்) இன்புறுகிறார்கள்; கால்நடைகள் சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்கள். நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். இன்னும், நிராகரித்தவர்களோ (இவ்வுலகில்) சுகபோகமாக வாழ்கிறார்கள். கால்நடைகள் சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்கள். நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப்போல் தின்று கொண்டும், (மிருகங்களைப் போல்) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.