caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 11

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:11

ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوْلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَأَنَّ ٱلْكَٰفِرِينَ لَا مَوْلَىٰ لَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (-நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதை அல்லாஹ் செய்தது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் நம்பிக்கையாளர்களின் எஜமானன் (உதவியாளன்) ஆவான். இன்னும் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் -அவர்களுக்கு எஜமானன் (உதவியாளன்) இல்லை.
Tamil Translation - Omar Sharifஅது (-நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதை அல்லாஹ் செய்தது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் நம்பிக்கையாளர்களின் மவ்லா (எஜமானன், உதவியாளன், பாதுகாவலன்) ஆவான். இன்னும், நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் -அவர்களுக்கு அறவே எஜமானன் (உதவியாளன்) இல்லை. (அவர்கள் வணங்கிய தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விடும்.)
Tamil Translation - Abdulhamid Baqawi11. இதன் காரணமாவது : நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக ஒரு பாதுகாவலனுமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70