caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Muhammad அத்தியாயம், வசனம் 13

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 95 · 47:13

وَكَأَيِّن مِّن قَرْيَةٍ هِىَ أَشَدُّ قُوَّةً مِّن قَرْيَتِكَ ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ أَهْلَكْنَٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம்மை வெளியேற்றிய உமது ஊரை (-உமதூர் மக்களை) விட பலத்தால் மிக உறுதியான எத்தனையோ ஊர் மக்கள், நாம் அவர்களை அழித்தோம். அவர்களுக்கு (அப்போது) உதவியாளர் அறவே இல்லை.
Tamil Translation - Omar Sharifஉம்மை வெளியேற்றிய உமது ஊரை (-உமது ஊர் மக்களை) விட பலத்தால் மிகக் கடுமையான எத்தனையோ ஊர் மக்கள் - அவர்களை நாம் அழித்தோம். ஆக, அவர்களுக்கு (அப்போது) அறவே உதவியாளர்(கள்) இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (நபியே!) உமது ஊரைவிட்டும் உம்மை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இருக்கவில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70