أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ دَمَّرَ ٱللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَٰفِرِينَ أَمْثَٰلُهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பூமியில் பயணித்து, தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். அதைப் போன்ற முடிவுகளே (-முந்திய சமுதாயத்தவர்களுக்கு நிகழ்ந்த இறைத் தண்டனைகள் போன்றுதான்) இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் பூமியில் பயணித்து, தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். இன்னும் அது போன்ற முடிவுகள்தான் (-முந்திய சமுதாயத்தவர்களுக்கு நிகழ்ந்த தண்டனைகள் போன்றுதான்) இந்த நிராகரிப்பாளர்களுக்கு நிகழும்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்ற தண்டணைகளே நிகழும்.