caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:4

قُلْ أَرَءَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِى مَاذَا خَلَقُوا۟ مِنَ ٱلْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِى ٱلسَّمَٰوَٰتِ ٱئْتُونِى بِكِتَٰبٍ مِّن قَبْلِ هَٰذَآ أَوْ أَثَٰرَةٍ مِّنْ عِلْمٍ إِن كُنتُمْ صَٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு காண்பியுங்கள்? அல்லது வானங்களில் (-அவற்றைப் படைத்ததில்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கின்றதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை அல்லது (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால்.
Tamil Translation - Omar Sharif(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) அழைப்பவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்குக் காண்பியுங்கள்? அல்லது, வானங்க(ளையும் வானங்க)ளில் (உள்ள படைப்புகளை படைத்ததிலும்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கிறதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை; அல்லது, (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள், நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் (ஆதாரத்தைக் காட்டுங்கள்!).”
Tamil Translation - Abdulhamid Baqawi4. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70