مَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى وَٱلَّذِينَ كَفَرُوا۟ عَمَّآ أُنذِرُوا۟ مُعْرِضُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணைக்கும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள் தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதை புறக்கணிக்கின்றார்கள்.
Tamil Translation - Omar Sharifவானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள், எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமும், (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்.