وَمَنْ أَضَلُّ مِمَّن يَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسْتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ وَهُمْ عَن دُعَآئِهِمْ غَٰفِلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைகின்றவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ அவர்களுக்கு (-அழைக்கப்படுபவர்கள் அழைப்பவர்களுக்கு) மறுமை நாள் வரை பதில் அளிக்க மாட்டார்கள். அவர்கள் அவர்களின் (-அழைக்கப்படுபவர்கள் அழைப்பவர்களின்) துஆவை (-அழைப்பை, பிரார்த்தனையை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைப்பவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ மறுமை நாள் வரை இவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். இன்னும், இவர்களின் அழைப்பை அவர்கள் அறியவும் மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது.