caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:31

يَٰقَوْمَنَآ أَجِيبُوا۟ دَاعِىَ ٱللَّهِ وَءَامِنُوا۟ بِهِۦ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُجِرْكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தாருங்கள்! (அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!) அவரை நம்பிக்கை கொள்ளுங்கள்! (அவர் கொண்டு வந்த குர்ஆனையும் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!) அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வலிமிக்க தண்டனையில் இருந்து உங்களை பாதுகாப்பான்.
Tamil Translation - Omar Sharif“எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் (இறுதி தூதராகிய இந்த) அழைப்பாளருக்கு பதில் தாருங்கள்! இன்னும், அவரை நம்பிக்கை கொள்ளுங்கள்! (அவரின் அழைப்பை ஏற்று, அவருடைய மார்க்கத்தை தழுவுங்கள்!) அல்லாஹ் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வலிமிக்க தண்டனையில் இருந்து உங்களைப் பாதுகாப்பான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70