caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:24

فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا۟ هَٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا بَلْ هُوَ مَا ٱسْتَعْجَلْتُم بِهِۦ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் அதை (-அல்லாஹ்வின் வேதனையை) தங்களது பள்ளத் தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (ஆது நபி கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை) மாறாக, இது நீங்கள் எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். இதில் வலி தரக்கூடிய தண்டனை இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் (-அல்லாஹ்வின் தண்டனை) தங்களது பள்ளத்தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக அதைப் பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (நபி ஹூது கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை.) மாறாக, இது நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். துன்புறுத்தும் தண்டனை இதில் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi24. பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70