تُدَمِّرُ كُلَّ شَىْءٍۭ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا۟ لَا يُرَىٰٓ إِلَّا مَسَٰكِنُهُمْ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும் (நாசமாக்கிவிடும்). அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஇது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் (அழித்து, நாசமாக்கி) சின்னாபின்னமாக்கிவிடும். (அப்படியே நடந்தது.) ஆக, அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களை நாம் தண்டிப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.