وَقَالُوٓا۟ ءَأَٰلِهَتُنَا خَيْرٌ أَمْ هُوَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًۢا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் கூறினார்கள்: “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவர் (முஹம்மது) சிறந்தவரா? (எங்கள் கடவுள்களே சிறந்தவை. எனவே, நாங்கள் அவற்றையே வணங்குவோம்.) தர்க்கம் செய்வதற்காகவே தவிர அவரை (-ஈஸாவை) அவர்கள் உமக்கு உதாரணமாக பேசவில்லை. மாறாக, அவர்கள் தர்க்கம் செய்கின்ற மக்கள் ஆவர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவர் (முஹம்மத்) சிறந்தவரா? (எங்கள் கடவுள்களே சிறந்தவை. எனவே, நாங்கள் அவற்றையே வணங்குவோம்.)” தர்க்கம் செய்வதற்காகவே தவிர அவரை (-ஈஸாவை) அவர்கள் உமக்கு உதாரணமாக பேசவில்லை. மாறாக, அவர்கள் (எப்போதுமே) வாக்குவாதம் செய்யக்கூடிய மக்கள் ஆவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. ‘‘எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?'' என்று கேட்கத் தலைப்பட்டனர். வீண் விதண்டாவாதத்திற்கே தவிர உமக்கு அவர்கள், அவரை உதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் மக்கள்தான்.