caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:59

إِنْ هُوَ إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَٰهُ مَثَلًا لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஈஸா) அவர்மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளாக) இல்லை. அவரை நாம் இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.
Tamil Translation - Omar Sharif(ஈஸா) அவர்மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளோ, கடவுளின் மகனோ இல்லை.) இன்னும், நாம் அவரை இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi59. ஈஸாவோ, நமது அடிமையே தவிர வேறில்லை. (அவர் கடவுளல்ல; நமது பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவுமில்லை; மாறாக, இதை மறுத்தே கூறியிருக்கிறார்.) அவர் மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70