وَمَن يَعْشُ عَن ذِكْرِ ٱلرَّحْمَٰنِ نُقَيِّضْ لَهُۥ شَيْطَٰنًا فَهُوَ لَهُۥ قَرِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionயார் ரஹ்மானை நினைவு கூர்வதை புறக்கணிப்பாரோ (அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மாட்டாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்.
Tamil Translation - Omar Sharifயார் ரஹ்மானை நினைவு கூர்வதை(யும் அவனுடைய வேதத்தையும்) புறக்கணிப்பாரோ (-அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மறுப்பாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். ஆக, அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான்.