caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zukhruf அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 63 · 43:21

أَمْ ءَاتَيْنَٰهُمْ كِتَٰبًا مِّن قَبْلِهِۦ فَهُم بِهِۦ مُسْتَمْسِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் அதை பற்றிப் பிடித்திருக்கின்றார்களா? (அப்படி ஒரு வேதத்தை நாம் கொடுக்கவில்லையே! அப்படி இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)
Tamil Translation - Omar Sharif(இவர்களின் கூற்றுகளுக்கு ஆதாரமாக) இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா? ஆக, அவர்கள் அதை உறுதியாக பிடித்திருக்கிறார்களா? (அதன்படி செயல்படுகிறார்களா? அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)
Tamil Translation - Abdulhamid Baqawi21. அல்லது ஒரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதை அவர்கள் (இதற்கு ஆதாரமாக வைத்து) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70