وَقَالُوا۟ لَوْ شَآءَ ٱلرَّحْمَٰنُ مَا عَبَدْنَٰهُم مَّا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் கூறுகின்றனர்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனை செய்கின்றவர்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனையாக பேசுகிறார்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi20. தவிர, ரஹ்மான் (அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) நாடியிருந்தால் அவனையன்றி நாம் (வானவர்களை) வணங்கியே இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்க வாதம் செய்பவர்களேதவிர, அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை.