وَتَرَىٰهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرْفٍ خَفِىٍّ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ ٱلْخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ أَلَآ إِنَّ ٱلظَّٰلِمِينَ فِى عَذَابٍ مُّقِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அதன் முன் சமர்ப்பிக்கப்படுபவர்களாக அவர்களை நீர் காண்பீர், அவர்கள் இழிவினால் தலை குனிந்தவர்களாக திருட்டுப் பார்வையால் அவர்கள் பார்ப்பார்கள். நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: நிச்சயமாக தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமை நாளில் நஷ்டமிழைத்தவர்கள் தான் (உண்மையான) நஷ்டவாளிகள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான (நிரந்தரமான) வேதனையில் இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அதற்கு முன்பாக அவர்கள் சமர்ப்பிக்கப்படுவதை நீர் காண்பீர், அவர்கள் இழிவினால் தலை குனிந்தவர்களாக மறைவான (திருட்டுப்) பார்வையால் அவர்கள் (நரகத்தை) பார்ப்பார்கள். இன்னும், நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமை நாளில் நஷ்டமிழைத்தார்களோ அவர்கள்தான் (உண்மையான) நஷ்டவாளிகள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான (நிரந்தரமான) தண்டனையில் இருப்பார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (வேதனையைக்) கடைக் கண்ணால் பார்த்தவண்ணம் அவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படுவதையும் நீர் காண்பீர். மேலும், நம்பிக்கை கொண்டவர்கள் (அவர்களை நோக்கி) ‘‘எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் (இம்மையில்) நஷ்டத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள் மறுமையில் நிச்சயமாக முற்றிலும் நஷ்டத்தை அடைந்தவர்கள்தான்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் தங்கிவிடுவார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக.