caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:44

وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن وَلِىٍّ مِّنۢ بَعْدِهِۦ وَتَرَى ٱلظَّٰلِمِينَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ يَقُولُونَ هَلْ إِلَىٰ مَرَدٍّ مِّن سَبِيلٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionயாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) எந்தப் பாதுகாவலரும் அவனுக்கு இல்லை. (நபியே!) நீர் (மறுமையில்) பாவிகளைக் காண்பீர்! அவர்கள் வேதனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharifயாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) அவனுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை. இன்னும், (மறுமையில்) அநியாயக்காரர்கள் தண்டனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று அவர்கள் கூறுவதை (நபியே) நீர் பார்ப்பீர்!.
Tamil Translation - Abdulhamid Baqawi44. எவர்களையேனும் (அவர்களின் பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டால், அதற்குப் பின்னர் அவர்களை பாதுகாப்பவர் ஒருவரும் இருக்கமாட்டார். (நபியே!) வரம்பு மீறி அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் கண்ணால் கண்ட சமயத்தில் ‘‘இதிலிருந்து தப்ப ஏதேனும் வழி உண்டா?'' என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70