caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:16

وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ٱسْتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَلَهُمْ عَذَابٌ شَدِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் தர்க்கம் செய்கின்றார்களோ அவர்களின் வாதங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே! அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், - அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் - தர்க்கம் செய்கிறார்களோ அவர்களின் தர்க்கம் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே (அழிந்துபோகக்கூடியதே) ஆகும்! இன்னும், அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi16. எவர்கள் (நம்பிக்கை கொண்டு) அல்லாஹ்வுக்குப் பதில் கூறிய பின்னர், அவனைப் பற்றி (வீணாக)த் தர்க்கித்து(க் குழப்பத்தை உண்டு பண்ணி)க் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். அதனால், அவர்கள் மீது (அவனுடைய) கோபமும் ஏற்பட்டு கடினமான வேதனையும் அவர்களுக்குக் கிடைக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70