caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:17

ٱللَّهُ ٱلَّذِىٓ أَنزَلَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ وَٱلْمِيزَانَ وَمَا يُدْرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ قَرِيبٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்(தான்) சத்தியத்துடன் (இந்த) வேதத்தையும் தராசையும் (நீதத்தையும்) இறக்கினான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு எது அறிவிக்கும்? (அல்லாஹ்வைத் தவிர யார் ஒருவரும் உமக்கு மறுமையைப் பற்றி அறிவிக்க முடியாது.)
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ், உண்மையுடன் கூடிய இந்த வேதத்தையும் தராசையும் இறக்கி (நீதமாக நடக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி)னான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு யார் அறிவிப்பார்? (அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிவிக்க முடியாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi17. அல்லாஹ்தான் முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை இறக்கி வைத்தான். மேலும், அவனே (நீங்கள் நீதமாக நடந்துகொள்ள) தராசையும் படைத்தான். (நபியே!) மறுமை நெருங்கிவிட்டதென்பதை நீர் அறிவீராக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70