فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا وَمِنَ ٱلْأَنْعَٰمِ أَزْوَٰجًا يَذْرَؤُكُمْ فِيهِ لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்களையும் பூமியையும் படைத்தவன் உங்களுக்கு உங்களில் இருந்தே ஜோடிகளையும் இன்னும் கால்நடைகளில் (உங்களுக்காக) ஜோடிகளையும் அவன் ஏற்படுத்தினான். அதில் (-இப்படி ஜோடியாக ஏற்படுத்தியதில்) அவன் உங்களைப் படை(த்து வாழவை)க்கின்றான். அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு பார்ப்பவன்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான், வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களில் இருந்தே ஜோடிகளையும் இன்னும், கால்நடைகளில் ஜோடிகளையும் அவன் ஏற்படுத்தினான். இ(ப்படி ஜோடியாக ஏற்படுத்திய)தில் அவன் உங்களை அதிகமாக படை(த்து வாழவை)க்கிறான். அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.