caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 47

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:47

إِلَيْهِ يُرَدُّ عِلْمُ ٱلسَّاعَةِ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَٰتٍ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَآءِى قَالُوٓا۟ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமையைப் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படுகிறது. அவனது (அல்லாஹ்வின்) ஞானமில்லாமல் பழங்களில் இருந்து எதுவும் அவற்றின் பாலைகளில் இருந்து வெளிவருவதில்லை, பெண்களில் எவரும் கர்ப்பமடைவதுமில்லை, இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை “எனது இணைகள் (என்று நீங்கள் வணங்கியவை இப்போது) எங்கே?” என்று அவன் (அல்லாஹ்) அவர்களை (-இணைவைப்பவர்களை) அழை(த்து) (கேட்)க்கின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “(இன்றைய தினம்) எங்களில் யாரும் (உனக்கு இணை உள்ளது என) சாட்சி சொல்பவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்”.
Tamil Translation - Omar Sharifமறுமையைப் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படுகிறது. (அவனை அன்றி மறுமை நிகழப்போவதை யாரும் அறியமாட்டார்.) அவனது ஞானமில்லாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாலைகளில் இருந்து வெளிவருவதில்லை, பெண்களில் எவரும் கர்ப்பமடைவதுமில்லை, அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை. இன்னும், “எனக்கு இணையாக்கப்பட்ட தெய்வங்கள் எங்கே?” என்று அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “(இன்றைய தினம்) எங்களில் யாரும் (உனக்கு இணை உள்ளது என) சாட்சி சொல்பவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi47. (நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70