caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 37

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:37

وَمِنْ ءَايَٰتِهِ ٱلَّيْلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ لَا تَسْجُدُوا۟ لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَٱسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான் இரவு, பகல், சூரியன், சந்திரன் இவை அனைத்தும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அவனை (உண்மையான இறைவனை) வணங்குபவர்களாக இருந்தால்.
Tamil Translation - Omar Sharifஇரவு, பகல், சூரியன், சந்திரன் அனைத்தும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அ(ந்த உண்மையான இறை)வனை வணங்குபவர்களாக இருந்தால்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. ‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70