caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Fussilat அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 61 · 41:36

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَٰنِ نَزْغٌ فَٱسْتَعِذْ بِٱللَّهِ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம்(பழிவாங்குவதற்கு) உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம் (உமது எதிரியை பழிவாங்கும்படி) உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. (நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70