فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِىٓ أَيَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِيقَهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَخْزَىٰ وَهُمْ لَا يُنصَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, கேவலமான வேதனையை இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சுவைக்க வைப்பதற்காக, அவர்கள் மீது கடும் குளிர்காற்றை துரதிர்ஷ்டமான (தீமைகள் நிறைந்த) நாள்களில் நாம் அனுப்பினோம். மறுமையின் வேதனையோ மிக கேவலமானது. (அங்கு) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆகவே, கேவலமான தண்டனையை இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சுவைக்க வைப்பதற்காக, அவர்கள் மீது கடும் குளிர் காற்றை துரதிர்ஷ்டமான (தீமைகள் நிறைந்த) நாட்களில் நாம் அனுப்பினோம். மறுமையின் தண்டனையோ (அவர்களுக்கு) மிக கேவலமானது. (அங்கு) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.