وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَٰهُمْ فَٱسْتَحَبُّوا۟ ٱلْعَمَىٰ عَلَى ٱلْهُدَىٰ فَأَخَذَتْهُمْ صَٰعِقَةُ ٱلْعَذَابِ ٱلْهُونِ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, ஸமூது சமுதாயம் நாம் அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியை விட (வழிகேடான) குருட்டுத் தனத்தைத்தான் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவர்களை இழிவான வேதனையின் பேரழிவு பிடித்தது.
Tamil Translation - Omar Sharifஆக, ஸமூது சமுதாயம், நாம் அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியை விட (வழிகேடான) குருட்டுத் தனத்தைத்தான் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவர்களை இழிவான தண்டனையின் பேரழிவு பிடித்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi17. ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம் தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.