فَأَمَّا عَادٌ فَٱسْتَكْبَرُوا۟ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَقَالُوا۟ مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا۟ أَنَّ ٱللَّهَ ٱلَّذِى خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا۟ بِـَٔايَٰتِنَا يَجْحَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாக பெருமை அடித்தனர். “எங்களை விட வலிமையால் மிக பலசாலிகள் யார்” என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையால் மிக பலசாலியாவான் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நமது வசனங்களை மறுப்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஆக, ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாக பெருமை அடித்தனர். இன்னும், “எங்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலிகள் யார்” என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலியாவான் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நமது வசனங்களை மறுப்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.