caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 80

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:80

وَلَكُمْ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبْلُغُوا۟ عَلَيْهَا حَاجَةً فِى صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும் உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும் அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள். (அவை உங்களை சுமந்து செல்கின்றன. நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும், உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும், அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள். (-நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi80. அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அவற்றிலும் கப்பல்களிலும் (பல இடங்களுக்கு) நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70